COVID-19 ஒரு ஸ்வாப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது

இந்தச் சோதனை பாதுக்காப்பானது. உங்கள் உடலுக்கு பாதகம் விளைவிக்காது.

இந்தச் சோதனை எவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்தப் காணொளியில் விவரிக்கப்படுகிறது.

யார் சோதிக்கப்படுவார்கள்?

உங்களிடம் COVID-19 இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால் நீங்கள் ஒரு ஸ்வாப்பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

பரிசோதனை முடிவுகள் ஒரு நாள் கழித்து தெரிவிக்கப்படும்.
உங்கள் உடல் நலனைப் பொருத்தும், மருத்துவரின் பரிசோதனை ஆகியவற்றைப் பொருத்தும் நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.

நீங்கள் நலமாக இருந்தால், முடிவுக்காக காத்திருக்க மருத்துவர் உங்களை வீட்டிற்கு அனுப்பலாம்.

முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை நேரடியாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
உங்களை எவ்வாறு பாதுகாப்பாக தனிமைப்படுத்த முடியும் என்று உங்கள் முதலாளியிடம் கேளுங்கள்.

COVID-19 சோதனை அல்லது சிகிச்சைக்கு நான் கட்டணம் செலுத்த வேண்டுமா?

 
நீங்கள் பதிவுசெய்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால், கோவிட் -19 சோதனை சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் இலவசம்
நீங்கள் மார்ச் 27, 2020 முன் சிங்கப்பூரில் இருந்திருந்தால், அனைத்து நீண்ட கால பாஸ் அனுமதி (எஸ்-பாஸ், பணி அனுமதி) வைத்திருப்பவர்களுக்கும் COVID -19 சிகிச்சை பெற மருத்துவமனையில் தங்குவது இலவசம்

COVID-19 உறுதி படுத்தப்பட்டால்

நீங்கள் நேர்மறையாக சோதிக்கப்பட்டிருந்தால், பீதி அடைய வேண்டாம்!

சிகிச்சை முறை முழுவதும் உங்களுக்கு உதவ அதிகாரிகள் இருப்பார்கள்.

பரிசோதனை முடிவுகள் சாதகமாக இல்லையென்றால் வேறு இடத்திற்கு சிகிச்சை பெற தயாராகவும். இப்பொருட்களை எடுத்துக்கொள்ள ஹெல்த்செர்வ் அறிவுறுத்துகிறது:

-ஒரு கூடுதல் ஜோடி ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்.

-ஜாக்கெட்

-உங்கள் வேலை அனுமதி பாஸ் / சிறப்பு அனுமதி அட்டை

-பற்குச்சி மற்றும் சோப்புப் பெட்டி, சீப்பு

-தொலைபேசி மற்றும் தொலைபேசி சார்ஜர்

-தனிப்பட்ட பொருட்கள் – புத்தகங்கள்/பிரார்த்தனைப் பாய்

COVID-19 இல்லை என்று உறுதி படுத்தப்பட்டால்

தயவுசெய்து தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடித்து, தங்குமிடத்தில் உள்ள விதிகளைப் பின்பற்றவும்.
கிருமி பரவலைத் தவிர்க்க சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

உங்கள் அறிகுறிகளைக் கண்காணித்துகொள்ளுகள், உங்கள் வெப்பநிலையை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்பட்டால் தெரிந்தால் மருத்துவரை பாருங்கள்.

உங்கள் அறிகுறிகளை அதிகாரபூர்வ ‘COVID-19 Symptom Checker’- எனும் இனையதளத்தில் பரிசோதித்து கொள்ளலாம்.