ஹெல்த்செர்விலிருந்து கொவிட்-19 பற்றிய அண்மைய தகவல்

அன்புள்ள வெளிநாட்டு நண்பர்களே,

பதற்றம் அடையாதீர்கள் !

728 என்ற எண்ணிக்கை பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தலாம். 

குறிப்பாக இதில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 654 பேர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியிலிருந்துதான்.   ஆனால் இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.   சிங்கப்பூர் அதிகாரிகள் பரிசோதனைகளை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். 

உங்களின் பல நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.   தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் எண்ணிக்கை நிலையாக 23 பேர்களாகவே உள்ளது.  (26 பேர் நேற்றைய முன்தினம்)

இதற்கிடையே, நம் பாங்களாதேஷ் நண்பர் ( கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 42வது நபர்) 2 மாதங்களுக்குப் பிறகு தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியாகி சாதாரண வார்டுக்கு வந்துள்ளார். அவருக்காக நாங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய போராடும் தன்மையையும், தைரியத்தையும் நாங்கள் மெச்சுகிறோம். அவர் மருத்துவ மனையிலிருந்து நலமாகி வரும்போது அவருடைய மனைவியும், புதிதாகப் பிறந்த குழந்தையும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவர் என்பது உறுதி.

இன்னுமொரு நல்ல செய்தி  –   தீவு முழுவதும் 900 பொது ஆரோக்கியத் தயார்நிலை மருத்துவக் கூடங்கள் உள்ளன.   இவை சுவாசப்பிரச்சனை அறிகுறிகள் உடைய வேலை அனுமதிசீட்டு உள்ளவர்களுக்கு $10 கட்டணத்துக்கு பரிசோதனை வழங்குகின்றன.  

அதனால் எளிதாக இயல்பு நிலைக்குத் திரும்ப உங்களுடைய வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.   உங்கள் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்க உதவலாம்.   உங்களுக்கு உடல் நலமில்லை என்றால் உடனடியாக மருத்துவரைச் சென்று பாருங்கள்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து  இதைக் கடப்போம் !